அஜித்தின் அடுத்த படம் தல60

போனிகபூர் தயாரிப்பில் “நேர்கொண்ட பார்வை” படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார்.
இப்படத்தை வித்யாபாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன்னும் பலர் நடித்து வருகின்றனர். இப்படம் அஜித்தின் 59வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித்திடம், வினோத் அரசியல் கலந்த திரில்லர் கதை மற்றும் ஆக்‌ஷன் கதை ஒன்றையும் கூறினாராம். அரசியல் கதையில் விருப்பமில்லாத அஜித், ஆக்‌ஷன் கலந்த திரில்லர் கதைக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகுவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ஜிம்மில் ஒர்கவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து வருகிறாராம். மேலும் அஜித் இந்த படத்தில் போலீசாக நடிப்பதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *