வடசென்னை படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’. இப்படத்தை கலைப்புலி எஸ்.தானு தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருக்கிறார். இப்படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக ஜி.வி.பிரகாஷ் முடித்து வருகிறார். அதனை அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார் ரெக்கார்டிங் தியேட்டரில் தனுஷ் ஜி.வி.பிரகாஷ். மற்றும் பாடர்களுடன் இருக்கும் போட்டே இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.