
அக்னி வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்?
What can be done to deal with a high temperature?
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் ஆனது உச்சகட்ட நிலையை அடைந்து உள்ளது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் அடுத்த வாரம் துவங்க உள்ளது. அதில் இருந்து நம்மை காத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
உடல் சூட்டை பெரும்பாலும் அதிகரிப்பது வறுத்த உணவுகள் தான். அதனால், முடிந்த வரைவறுத்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.சைவ உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்கள், உங்களது உடல் சூட்டை குறைக்க வெகுவாக உதவும்.
தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுங்கள். மற்றும் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது உங்களது உடல் சூட்டை தணிக்க உதவும். மாதுளை ஜூஸ் உடன், பாதாம் எண்ணெய்யை கலந்து காலை வேளையில் எடுத்துக் கொண்டால், உடல் சூட்டை கட்டுப்படுத்தலாம்.
வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். எனவே இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.
குளிர்ந்த நீரில் சிறிது நேரம் கால்களை நனைய வைப்பது, உங்க உடல் சூட்டை தணிக்கும்.
காரமான உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கும். எனவே, காரம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அல்லது உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டாம்.
சோடியம் கலந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்த்திடுங்கள். ஏனெனில், இது உங்கள் உடல் சூட்டை அதிகரித்துவிடும்.உடல் சூடு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், சில நாட்கள் நட்ஸை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனெனில், நட்ஸ் உடல் சூட்டை அதிகரிக்கவல்லது.
உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
கோடையில் உடல் வறட்சியடையாமலும், குளிர்ச்சியுடனும் இருக்க இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே கோடைக்காலத்தில் தவறாமல் தினமும் 2 இளநீரைப் பருகுங்கள்.
சந்தனப் பொடியை நீர் அல்லது குளிர்ந்த பாலில் கலந்து பேஸ்ட் செய்து, நெற்றி மற்றும் தாடையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். வேண்டுமானால், சந்தனப் பொடியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.