
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற விராட்கோலி !
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அதிக வருமானம் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரும், ஒரே கிரிக்கெட்டரும் கோலி மட்டுமே ஆவார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த முறை 100வது இடத்தை பிடித்துள்ளார் கோலி. விளம்பரங்கள் மூலமாக 21 மில்லியன் டாலரும், சம்பளமாக 4 மில்லியன் டாலரும் சேர்த்து ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக கூறியுள்ளது.
உலகின் அதிக வருமானம் ஈட்டும் வீரராக அர்ஜெண்டினா கால்பந்துவீரர் மெஸ்ஸி உள்ளார். அவர் 127 மில்லியன் டாலரை வருமானமாக ஈட்டுகிறார்.
அடுத்த இடத்தில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ 109 மில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 105 மில்லியன் டாலருடன் உள்ளார்.
நான்காவது இடத்தில் 94 மில்லியன் டாலருடன் மெக்ஸிகோ பாக்ஸர் அல்வெர்ஸ் உள்ளார். அவர் சமீபத்தில் ஒரு நிறுவனத்துடன் 5 வருடத்துக்கு மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்தாகியுள்ளார்.
5வது இடத்தில் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 93.4 மில்லியன் டாலருடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
என்பிஏ வீரர்கள் ரஸல் வில்சன் மற்றும் ஆரோன் ரோட்ஜர்ஸ் இருவரும் முறைய 6 மற்றும் 7வது இடத்தில் உள்ளனர்.
டைகர் உட்ஸ் 69.3 மில்லியன் டாலர் வருமானத்துடன் 11வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் செரினா வில்லியம்ஸ் மட்டுமே. 29.2 மில்லியன் டலருடன் 63வது இடத்தில் உள்ளார்.