
தமிழ்நாடு மற்றும் புதுசேரியில் உள்ள +2 மாணவர்களுக்கான பொதுதேர்வு இன்று ஆரம்பமாகி உள்ளது. மொத்தம் உள்ள 2944 தேர்வு மையங்களில் 861107 மாணவ மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு முதல் பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் விதம் 600 மதிபெண்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. மொழி பாடங்களில் இரண்டு தாள்களுக்கு பதிலாக ஒரே தாளாக தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறும்.