
விளையாட்டுஹாக்கி
ஹாக்கியில் இந்தியா கோல் மழை
The Indian team has entered the finals for the 8th time
அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் ஆனது மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் போலந்தை சந்தித்தது.
இதில் இந்திய அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். இந்திய வீரர்கள் வருண் குமார், சந்திப் சிங் அதிகபட்சமாக இரண்டு கோல்கள் அடித்தனர். இந்திய அணி 10 -0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
6 அணிகள் பங்கு பெற்ற இந்த தொடரில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியாவும், இரண்டாம் இடம் பிடித்த தென் கொரியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளன.
இன்று மாலை 6 மணிக்கு இறுதிப்போட்டியானது நடைபெறுகிறது. லீக் சுற்றில் இரண்டு அணிகளும் மோதிய ஆட்டமானது டிராவில் முடிந்தது குறிப்பிடதக்கது