
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து 2011- ஆம் ஆண்டில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த மங்காத்தா படத்தை அஜித் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆலோசித்து வருவதாக வெங்கட் பிரபு சில வாரங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித்தை வெங்கட் பிரபு தற்போது சந்தித்து பேசியுள்ளார். இதனால் மங்காத்தா-2 படத்திற்கான அறிவிப்பு விரைவில் வருமா என அஜித் ரசிகர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்