
பொங்கல் விருந்தாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளிவந்து இருக்கும் படம்தான் விஸ்வாசம்.
அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் நடித்த படத்தை சிவா இயக்கி உள்ளார். தூக்குதுரை எனும் கிராமத்து கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வழங்கி உள்ளார் அஜித்.
படத்தில் தூக்குதுரை வரும் காட்சிகளில் எல்லாம் திரை அரங்குகளில் ரசிகர்களின் விசில் சத்தம். தூக்கு துரை இங்கிலீஷ் பேசும் காட்சிகளில் எல்லாம் திரைஅரங்குகள் சிரிப்பலையில் அதிர்கின்றன. மனுஷன் சென்டிமெண்ட், ஆக்சன், ரொமான்ஸ், காமெடி என அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடித்து உள்ளார்.
நிரஞ்சனா என்னும் டாக்டர் வேடத்தில் நயன்தாராவும் பக்குவமான நடிப்பாற்றலை வழங்கி உள்ளார்.கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு மனைவி மகளுடன் செல்ல விருப்பப்படும் தூக்கு துரை பத்து வருடங்களுக்கு முன் பிரிந்து சென்ற மனைவி மற்றும் மகளை அழைத்து வர மும்பை செல்கிறார்.
அங்கு அவர் சந்திக்கும் பிரச்சினைகளையும், குடும்பத்தினர் உடன் மீண்டும் இணைந்தாரா? என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சுவாரசியமாக சொல்லி உள்ளார் இயக்குனர் சிவா.
முந்தைய படங்களில் அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு இந்த படத்தின் மூலம் முற்று புள்ளி வைத்து உள்ளார் இயக்குனர் சிவா. இமானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்க்கு மேலும் வலு சேர்க்கின்றன.
படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றியும், எடிட்டர் ரூபணும் தங்களின் பணியை சிறப்பாகவே செய்து உள்ளனர். அஜித் ரசிகர்கள் விரும்பும் அனைத்து விஷயங்களும் இருப்பதுதான் படத்தின் சிறப்பு.