இந்தியாஉலகம்கிரிக்கெட்தமிழ்நாடுபுதிய செய்திகள்விளையாட்டு

விராட் கோலி சாதனை !

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, சாதனைகளை முறியடிப்பது டீ சாப்பிடுவது போல இருக்கிறது. தனது கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை அநாயாசமாக முறியடித்தவர் கிங் கோலி. தற்போது இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார். ஒருவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இன்னொருவர் ‘நி லெஜண்டு’ பிரயன் லாரா.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் லாராவுக்குத் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் 20,000 சர்வதேச ரன்களை ஸ்கோர் செய்ய 453 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டனர். ரிக்கி பாண்டிங்கிற்கு 468 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ஆனால் இதுவரை 415 இன்னிங்ஸில் விளையாடியுள்ள கோலி எடுத்திருக்கும் சர்வதேச ரன்கள், 19,896 ஆகும். இதுவரை கோலி 131 டெஸ்ட் போட்டிகள், 222 ஒருநாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அடுத்ததாக இந்திய அணி, உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் 104 ரன்கள் எடுத்தால், கோலி, சச்சின் மற்றும் லாராவின் சாதனைகளை முறியடித்துவிடுவார். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. காரணம் கடந்த இரண்டு போட்டிகளில் கோலி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதற்கு முன்னர் கோலி, அதிவகேமாக 11,000 ஒருநாள் ரன்களை கடந்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி பெற்றுள்ள

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker