மற்றவைகள்
வாழ்க்கை தத்துவங்கள் !!
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி,
இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை,
தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.
அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில், வாழ்நாட்கள் போதாது
ஏனெனில் இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம்.