
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தமிழ் நாட்டையே உறைய வைத்து இருக்கும் பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு தொடர்பு இல்லை என காவல்துறை வழக்கை அவசர அவசரமாக முடித்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுவதால் வழக்கை சிபிஐக்கு மாற்றுங்கள் என கூறியுள்ளார்.