
ரிசர்வ் வங்கி அனுமதி
ஓர் வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு எளிதில் பணம் பரிவர்த்தனை செய்யலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் இந்த வசதியை பயன்படுத்த முடியாது; விடுமுறை நாளிலும் இது செயல்படாது. ஆனால் ஆண்டு முழுவதும் ஒரு நாள் விடாமல் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை அனைத்து வங்கிகளும் எடுத்துள்ளன.
சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைனில் பணம் அனுப்புவதற்கான என்இஎப்டி கட்டணம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பப்படுகிறது. என்இஎப்டி முறையில் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளும், அதற்கு மேல் ஆர்டிஜிஎஸ் முறையிலும் பணம் அனுப்பப்படுகிறது.ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாள் முழுவதும் எளிதாக மேற்கொள்ளும் வசதி கிடைத்துள்ளது