
தீபாவளி அன்று நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த “சர்க்கார்” திரைப்படம் தொடர்த்து பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆளுங்கட்சி அமைச்சர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மேலும் ஆங்காங்கே கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். இதற்கிடையில் முருகதாஸ் அவர்கள் தனது Twitter பக்கத்தில் நள்ளிரவு போலிஸ் தனது வீட்டின் கதவைத் தொடர்ந்த்து தட்டியதாகவும் தெரிவித்திருத்தார். இப்பொழுது முருகதாஸ் எங்கு இருக்கிறாரெனத் தெரியவில்லை. படத்தில் விஜய் பேசும் வசனங்கள் கட்சியினரை எரிச்சல் அடைய செய்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் படத்தில் உள்ள சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்கச் சர்க்கார் படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் முருகதாஸ் “முன் ஜாமீன் கேட்டு மனு” செய்துள்ளார்.
Politics