இந்தியா
முதல்வரை கொல்ல சதியா?
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் முதல்வராக இருக்கிறார். ஆரம்பத்திலிருந்து பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்.
நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே வந்தபோது அவர்மீது மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடி தூவினார். இந்தச் செயலினால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர், பிறகு சுதாரித்து கொண்ட அவரது பாதுகாவலர்கள் கைது செய்தனர்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால் அவர்கள் தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாகத் தெரிவித்துள்ளார். தனது வளர்ச்சி பொறுக்காமல் இவ்வாறு செய்கிறார்கள் எனவும் இதற்குத் தான் கவலைப்பட போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.
தனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நாட்டுக்கேயெனத் தெரிவித்துள்ளார்.