தமிழ்நாடு
புதிய கட்சி தமிழகத்தில் விரைவில் ஆரம்பம்
இன்று இயக்குனர் கௌதமன் அவர்கள், செய்தியாளர்களை சந்திந்தார். அந்த சந்திப்பில் இன்று விரைவில் தான் தனி கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்தார். அதாவது வருகிற பொங்கல் பண்டிகைக்கு கட்சிக்கொடி, கட்சி கொள்கை கோட்பாடு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். விரைவில் மாநாடு நடத்தப்படும் எனவும், மாநாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும், தெரிவித்தார். மாநாடு நடைபெறும் இடம், தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரையும் ஆதரிப்பதாகவும். அரசியலுக்கு வந்தால் அவர்களை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நிற்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். ஆக மொத்தத்தில் புதிய கட்சிகளின் எண்ணிக்கை ஒன்று உயர்வது உறுதி.