
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பிசிசிஐ அவருக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து ஸ்ரீசாந்த் கேரள நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தடையை நீக்க கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கிய உச்சநீதி மன்றம் அவர் போட்டிகளில் பங்கேற்பது குறித்து 3 மாதத்திற்குள் முடிவெடுக்க பிசிசிஐ-க்கு உத்தரவு இட்டு உள்ளது.