
அனைத்து இந்திய திரைப்பட பணியாளர் சங்கம் வெளியீட்டு உள்ள அறிக்கையில் காஷ்மீரில் நடைபெற்ற இந்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய திரைப்பட நிறுவனங்கள் எவரும் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாய்ப்பு அளிக்ககூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தால் அவர்களை நீக்குமாறும் கூறப்பட்டு உள்ளது.