
இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்று நாக்பூரில் இரண்டாவது ஒரு நாள் போட்டியானது பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.