
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கு வருகிற 25 ஆம் தேதி முதல் பயிற்சி தொடங்க உள்ளது.
தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில், மாநிலம் முழுவதும் நீட் மற்றும் JEE தேர்விற்கென 413 இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் ஏற்கனவே 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பொது தேர்வையொட்டி இந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த பயிற்சிகள் மார்ச் 25-ம் தேதி முதல் தொடர உள்ளது. மையங்களில் பயிற்சி பெற சுமார் 20,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 4,000 பேருக்கு தங்கும் இடம் வசதி அளித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.