
சினிமா பைனான்ஸ்சியர் சுப்ரமணியம் மற்றும் அவரது உறவினர் கோபி என்பவரும் தன் வீட்டிற்க்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஸ்ரீரெட்டி அதற்கான சிசிடிவி ஆதாரங்களையும் வெளியிட்டு உள்ளார். தொடருந்து அவர்கள் தனக்கு தொந்தரவுகள் தருவதால் துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே காவல் துறையில் புகார் அளித்து உள்ள ஸ்ரீரெட்டி தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் தெரிவித்து உள்ளார்.