
நியூசிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டு உள்ள வங்காளதேசம் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்சில் நாளை நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று காலை கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கி சூட்டில் வங்காள தேச வீரர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் நாளை நடைபெற இருந்த டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக வங்காள தேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.