
சோயிப் அக்தர் கவலை!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நேஷ்னல் அணி ” எப்போது இலங்கை கிரிக்கெட்டுக்கு உறுதுணையாக இருந்துள்ளது” என்று கூறியுள்ளார். இலங்கையின் சிறந்த வீரர்கள், டி20 கேப்டன் லசித் மலிங்கா, மற்றும் முன்னாள் கேப்டன்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் தவிர தினேஷ் சந்திமல், சுரங்கா லக்மல், திமுத் கருணாரத்ன, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் செப்டம்பர் 27 தொடங்கவிருக்கும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளனர்.
“பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை புறக்கணித்த 10 வீரர்களால் நான் ஏமாற்றமடைந்தேன். இலங்கை கிரிக்கெட்டுக்கு பாகிஸ்தான் பெரிதும் ஆதரவு தெரிவித்தது. இலங்கையில் சமீபத்தில் ஈஸ்டரின் போது ஏற்பட்ட தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானின் அண்டர்-19 அணி இப்போது அங்கு விளையாட சென்றுள்ளது,” என்று அக்தர் ட்விட் செய்தார்