ஆன்மிகம்கோவில்கள்

சூரியனார் கோவில் கும்பகோணம்.

2018-2019 -கான குருபெயர்ச்சி பலன்கள் பார்க்க

கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும்.திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து கோவிலை அடையலாம். இந்த கோவில் ஒன்பது நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும்.

தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சூரிய பகவான் பார்வை அளிக்கும் தெய்வமாக கருதப்படுகிறார். ஆகையால் பார்வை குன்றியர்களும், கண்நோய் உடையவர்களும் இங்கு வந்து வழிப்பட்டு பலன் பெறுகிறார்கள். அது மட்டுமல்ல முழு முதல் கடவுளாக சூரியன் இங்கே கருவறையில் அருள் பாலிக்க இது ஒரு நவக்கிரகக் கோவிலாக மலர்ந்துள்ளது.

சூரியனை சுற்றியுள்ள மற்ற எட்டு கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்னும் இரு பாம்புகள் ஆகிய கிரகங்கள் சூரியனார் கோவில் வளாகத்தில் சுற்றாலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன. சூரியன் எதிரே உள்ள மண்டபத்தில் குதிரை நிற்கிறது. பிரகஸ்பதி என்று அழைக்கப்படும் குரு தனியாக சன்னதியில் இல்லாமல் சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார்.

சுக்கிரதிசை, குரு திசை, சனி திசை, ராகு திசை, கேது திசை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த தோஷம் நீங்க அந்தந்த தெய்வங்களை வேண்டி விரதம் மேற்கொண்டு இங்கு வந்து வழிபடுகின்றனர். 

தமிழ்நாட்டில் நவக்கிரகங்களுக்கு என்று 9 ஆலயங்கள் தனித்தனியாக உள்ளன. அங்கு மக்கள் சென்று வணங்குகின்றனர். ஆயினும் அத்தனை தலங்களையும் வழிபட்ட பயன் சூரியனார் கோவிலுக்கு சென்று-வணங்கினாலே கிடைக்கிறது.

கர்ப்பக்கிரகத்தில் சூரிய பகவான் நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் திகழ்கிறார் அவற்றில் தாமரை மலரை ஏந்தி நிற்கிறார். உஷா, சாயா (பிரத்யுஷா) என்ற இரு தேவியார் சூரிய பகவானின் இரு பக்கங்களிலும் நிற்கின்றனர். 

திருவிழாக் காலங்களில், உஷாதேவி, சாயாதேவி இருவரும் சூரியனின் இருபுறமும் எழுந்தருளி சிறப்பாக பவனி வரும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு பள்ளியறை நாச்சியாராகத் திகழ்பவள் சாயாதேவியே. உஷாதேவி-காலை உதிப்பவள் எனவே அவள் பள்ளியறை நாச்சியாக இடம் பெறவில்லை.

விபரங்கள்

இறைவன் : சூரியன்

தல விருட்சம்;எருக்கு

நிறம் : சிவப்பு

வச்திரம்: சிவப்புத் துணி

மலர்: தாமரை மற்றும் எருக்கு

இரத்தினம்: ரூபி

தான்யம் : கோதுமை

வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்

உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை

வரலாறு

கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து இக்கோவில் குலோத்துங்கச்சோழரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என தெரிய வருகிறது(கி.பி 1060 – 1118).

கட்டிடக்கலை

சூரியனார் கோயில் தலம் கும்பகோணத்திற்கு கிழக்கே அமையப் பெற்றுள்ளது கும்பகோணம் – மயிலாடுதுறை சாலைக்கும் ஆடுதுறைக்கும் இடையே 2 km (1.2 mi) தூரம் உள்ளது. திருபனந்தாள் மற்றும் கீழ் அனைக்கட்டிலிருந்து நேரடி சாலை வசதி உள்ளது. இக்கோயில் நான்கு பிரகாரங்களுடன் கூடிய சுற்று சுவருடன் நடுவே ராஜகோபுரத்துடன் எழும்பியுள்ளது. .  

2018-2019 -கான குருபெயர்ச்சி பலன்கள் பார்க்க

எப்படி செல்வது?

அருள் மிகு சூரியனார் கோவில் Map link

தஞ்சை மாவட்டம் திருவி டைமருதூர் வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் ஆடுதுறைக்கு தெற்கில் 2 கி.மீ. தூரத்தில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், ஆடுதுறையிலிருந்தும், அணைக்கரை – திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.-பேருந்தில் வருவோர் திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வடகிழக்கே 2 பர்லாங்தூரம் நடந்து வந்தால் சூரியனார் கோவிலை அடையலாம். 

Related Articles

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker