
சர்க்கார் படத்தின் விவகாரம் தொடர்பாக நடிகர், இயக்குனர் மற்றும் எழுத்தாளருமான திரு கே.பாக்யராஜ் அவர்கள் தனது எழுத்தாளர் சங்கத்தின் தலைமை பொறுப்பை ராஜினாமா செய்தார். படத்தின் கதை விவகாரத்தில் மிக அழுத்தமாக செயல்பட்டவர்
கே.பாக்கியராஜ்.
இதன் காரணமாகவே பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் நிர்வாகிகள் அவரது ராஜினாமாவை மறுத்தனர். இந்நிலையில் பிறகு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் 21 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டன.
இதற்கு அந்த 21 பேரும் தெரிவித்தது பாக்கியராஜ் தலைவராக இல்லாததால் தான் சங்கத்தை விட்டு விலகுவதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியராஜ் அவரது முடிவை மாற்றிக்கொண்டார்.
அதனால் மீண்டும் அவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் மீண்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.