
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார், 500 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
வீடியோகான் நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்காக, சந்தா கோச்சார் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 500 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ-வாக இருந்த காலக் கட்டத்தில், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது..
இதுகுறித்து, உச்ச நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னரே, தனது பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார்.மேலும், கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு வழங்கிய பணப்பலன்களையும் திருப்பி வழங்குமாறு வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.