
2011 முதல் 2018 வரையிலான ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கபட்டு உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் வழங்கபடும் இந்த விருது சில ஆண்டுகளாக வழங்கபடாமல் இருந்தது. பிரபு தேவா, விஜய் சேதுபதி, கார்த்தி, யுவன்ஷங்கர் ராஜா, பிரசன்னா, சசிகுமார், தம்பிராமையா, பொன்வண்ணன், சிங்கமுத்து, பிரியாமணி, உன்னிமேனன், இயக்குநர் ஹரி உள்ளிட்ட பலருக்கு இந்த விருதுகள் அறிவிக்கபட்டு உள்ளன. பாடலாசிரியர் புதுமை பித்தனுக்கு பாரதி விருதும், பாடகி ஜானகிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் அறிவிக்கபட்டுள்ளன.