
இந்தியன் பிரிமியர் லீக்கில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 172 இன்னிங்ஸில் 4985 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 155 இன்னிங்ஸில் 4948 ரன்களுடன் பெங்களுர் ராயல் சேலஞ்சரஸ் கேப்டன் விராட் கோலி உள்ளார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா 168 இன்னிங்ஸில் 4493 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.