
ஐசிசி டி20 உலககோப்பையானது அடுத்த வருடம் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஒரு பிரிவிலும் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா,ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்று உள்ளன.
தகுதி சுற்றில் விளையாடும் அணிகளில் நான்கு அணிகள் குரூப் சுற்றில் இடம் பெறும். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதி சுற்றில் விளையாட உள்ளன. உலக கோப்பை துவக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி துவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணியை பெர்த்தில் எதிர்கொள்கிறது.