
தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக சட்டமன்ற பேரவை விதி எண் 110 இன் கிழ் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார். இதனால் கிராமபுறங்களில் வாழும் 35 லட்சம் குடும்பங்களும்,நகர்ப்புறத்தில் வாழும் 25 லட்சம் குடும்பங்களும் பயன் அடைவர் எனவும் தெரிவித்து உள்ளார். இதற்காக 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.