எந்த வித உதவியும் இல்லை
வேதனை! வேதனை!
நாகை மாவட்டத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை.கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் விழுந்துள்ள மரங்களைக் கூட அகற்றவில்லை. மக்கள் மிகவும் வேதனையும் துயரத்தையும் அடைந்து உள்ளார்கள்.
அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது என்றால், ஏன் இந்த அவலக்குரல்.
புயல் நகர்ந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் ஒருவரைக் கூடத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றால்? எடுத்த நடவடிக்கை என்ன? பெயரளவுக்கு அவர் அவர் பேட்டி கொடுப்பதும் பிறகு அதைச் சிலர் பாராட்டுவதும் எவ்வாறு சாத்தியம்.
மக்கள் ஒருவரை கூட இன்னும் நேரில் பார்க்கவே இல்லையென்றால் எவ்வாறு உதவிகள் கிடைக்கும்.போர்க்கால நடவடிக்கை என்றால் என்ன அர்த்தம்! அரசியல்வாதிகள், நடிகர்கள் யாரும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிக்கே செல்லாமல் பாரட்டுத் தெரிவிப்பது எப்படி? புயலுக்கு முன்பு இருந்த நிலை என்ன? அவர்களது ஏற்பாடுகள்மூலம் அடைந்த முன்னேற்றம் என்ன? ஏதாவது தகவல் உண்டா! இல்லை!
புயலில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் கூட எத்தனை குளறுபடி, உங்கள் ஏற்பாடுகள் தெளிவாக இருந்தால் ஏன்? இந்தக் குளறுபடி, ஊர் ஊருக்குக் குழு அமைத்தால் ஏன்?
இந்தப் போரட்டங்கள், பெரும்பாளான பகுதிகளில் சாலைகளில் உள்ள மரங்களைக் கூட அகற்றவில்லை என்றால் எவ்வாறு மக்களைச் சந்தித்தீர்கள்? எவ்வாறு உதவிப் பொருட்களை வழங்கினீர்கள்? என்று கூர இயலுமா, மீடியா வெளிச்சம் நிழல்களால் நிலவரத்தை மாற்ற இயலாது. இறந்தவர்களின் உடலைக் கூட மயானத்துக்குக் கொண்டு செல்ல இயலவில்லை.
சாலை முழுவதும் மரங்கள், நீங்கள் எடுத்த நடவடிக்கை, அரசு செய்த ஏற்பாடுகள்மூலம் அடைந்த முன்னேற்றம் என்ன? இரண்டு அமைச்சர்கள் களத்தில் இருக்கிறார்கள் என்றால் மற்ற அமைச்சர்கள் செய்வது என்ன?
எதிர்கட்சி தலைவர் எதைப் பார்த்துச் சிறப்பாகச் செயல்பட்டார் என்று கூறினார்? அவர் கூறிய உடனே அனைத்து அரசியல் தலைவர்களும் எல்லாம் சரி சரி என்று பேட்டி கொடுப்பது எவ்வாறு?
ஏதாவது தனது கருத்தைத் தெரிவித்து நானும் களத்தில் உள்ளேன் என்று கூறுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சாபக்கேடு மீடியா வெளிச்ச வியாதி உள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.
இயற்க்கை பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்று அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள்! நீங்கள் அனுப்பிய கப்பல், மருந்துப் பொருட்கள் எல்லாம் மக்களைச் சென்று அடைந்து இருந்தால் ஏன் இத்தனை மன வேதனை!
ஒரு அமைச்சர் சொல்லுகிறார் “கஜா கூஜா ஆகிவிட்டது” இவ்வளவு அவதிக்கு இடையில் எவ்வாறு கூஜா என்று விளக்குவாரா?
புயலால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டுகிறது. மொத்த பொருளாதாரமும் சீரழைந்துவிட்டது எவ்வாறு கஜா கூஜாவானது என்பதை காண்பிக்க வேண்டிய பத்திரிக்கைகள் அமைச்சர் துணிச்சல் பேட்டி என்று கூறுவதுதான் உங்கள் வேலையா? இது தவறு! என்று கூட உங்களுக்குப் புரியவில்லை எங்களது வேதனை!
எப்பொழுது இடர்பாடுகள் வந்தாலும் மீடியாவுக்கு மட்டும் சர்க்கரை பொங்கல் தரும் சுயநலவாதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் கஞ்சிக்கு கூட வழியில்லை. வீண் மீடியா வெளிச்சத்தை விட்டு ஒரு முறை இறங்கி களத்தில் வேலை பாருங்கள், அதன் பிறகு வீண் தம்பட்ட பேச்சுகள், பேட்டிகள் பாராட்டுகள் தேவைப்படாது.
உங்களைக் குறை சொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எங்களது சிறு குறைகளையாவது சரிசெய்ய முழு முனைப்புடன் செயல்படுங்கள் என வேண்டுகிறோம்.
இப்படிக்குப் பாதிக்கப்பட்ட ஒருவனின் குரல்.