உலகம்

இலங்கை அதிர்வு

ஸ்ரீலங்காவில் தொடர்ந்து வந்த அரசியல் குழப்பம் இப்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் முன்னாள் இலங்கைக் அதிபர் ராஜபக்சே அவர்கள் சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். அவருடன் 50 முன்னாள் எம்பிக்களும் இணைந்துள்ளனர். இதனால் சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்சனையை எவ்வாறு சிறிசேனா எதிர்கொள்ளப் போகிறார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இன்று கொழும்பிலுள்ள பொதுஜன முன்னணி அலுவலகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம் பின்வருமாறு பொதுஜன முன்னணி 50 லட்சத்து 6 ஆயிரத்து 737 ஓட்டுகளை பெற்றது. ஆனால் சிறிசேனா தலைமையிலான கட்சி 14 லட்சத்து 97 ஆயிரத்து 234 ஓட்டுகளை மட்டுமே பெற்றது. ரனில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் 36 லட்சத்தில் 40 ஆயிரத்து 620 வாக்குகளைப் பெற்றது. இப்போது சிறிசேன தலைமையிலான கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது போல சிறிசேனவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. சிறிசேனவின் ஆதரவாளர்கள் தனியாக ராஜபக்சேவுடன் சென்றுவிட்டதால். சிறிசேனவின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்தகைய சூழல் ரனில் விக்கிரமசிங்கே சாதகமான பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சின்னமான தாமரை சின்னத்தில் வெற்றி பெறக் கூடும் என்பதால், ராஜபக்சேக்கு கூடுதலான ஓட்டுகளை எதிர்பார்க்கலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிறிசேனாவை கடுமையாக குற்றம் சாட்டுவதாக தெரிகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் உள்ளவர்கள் பலவித குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். சிறிசேனா செய்த அடுக்கடுக்கான தவறுகளால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடும் பதற்றத்தில் உள்ளது. நாடு முழுவதும் இராணுவங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker