
அரசியல்இந்தியாஉலகம்புதிய செய்திகள்
இராணுவம் கொந்தளிப்பு?
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு, தேசத் துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து பெஷாவர் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், ‘‘முன்னாள் ராணுவ தளபதியாக, முப்படை தலைவராக, நாட்டின் அதிபராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கு சேவை செய்து, பல போர்களில் ஈடுபட்டவர் நிச்சயமாக தேசத் துரோகியாக இருக்க முடியாது. இந்த முடிவு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், தன்னிச்சையாக அவசர கதியில் எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் சாசனப்படி நீதி வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் விரும்புகிறது,’’ என்று தெரிவித்துள்ளார் .