
தமிழ்நாடுபுதிய செய்திகள்
இரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து?
சென்னைக்கு மிக அருகில் 200 கி.மீ. தொட்டு இருக்கிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்களானது இயக்கப்படும். அதே சமயம், காற்று, மழை ஆகிய சூழலை பொறுத்து ரயில்கள் இயக்கமானது மாறுப்படக்கூடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.
இதனையடுத்து, நிவர் புயலின் தீவிரம் அதிகரித்துள்ளதால் இன்று இரவு 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சூழலைப் பொறுத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.