இந்தியாகட்டுரைகள்கிரிக்கெட்விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டில் பிளவா?

கிரிக்கெட்டில் நடப்பது என்ன சிறப்புக் கட்டுரை விவாதிக்கிறது.

மகளிர் கிரிக்கெட் அணியில் கடும் குழப்பம் நிலவுகிறது. அரசியல் கூட்டங்களைவிட மகளிர் கிரிக்கெட் அணியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஆளாளுக்குத் தனிக்குழு அமைத்து அவர்களின் சொந்த வாரியம் போல் செயல்பட்டு வருகிறார்கள்.
இதன் விளைவு தான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

மிதாலி ராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் அவர் சரமாரியான குற்றச்சாட்டுகளைக் கிரிக்கெட் போர்ட் மீது வைத்தார்.முக்கியமாகத் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது குற்ற ஏவுகணைகளை ஏவினார்.

இதை அடுத்து ரமேஷ் பவார் அறிக்கை ஒன்றை கிரிக்கெட் போர்டுக்கு அளித்தார். இறுதியில் நவம்பர் 30 உடன் ரமேஷ் பவார் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய பயிற்சியாளர் தேர்வு செய்வது டிசம்பர் 20-யில் மும்பையில் நடைபெற உள்ளது. இதற்குப் புதிய பயிற்சியாளர் விண்ணப்பங்களைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாமெனக் கிரிக்கெட் போர்ட் அறிவித்துள்ளது.

தற்பொழுது பயிற்சியாளர் விண்ணப்பம் கோரியுள்ள கிரிக்கெட்போர்டு இதே நிலை ஏதாவது ஒரு வீரர் ஆண்கள் அணியில் பயிற்சியாளர்மீது குற்றம் சாற்றப்பட்டால் ரவி சாஸ்திரியை நீக்குவார்களா, அணியில் எவ்வாறு ஒரு நிலைத்தன்மை நிலைக்கும் என்பதை உணர வேண்டும்.

பயிற்சியாளருக்குப் போதிய ஆதரவை வீரர்களும், கிரிக்கெட் போர்டும் தர வேண்டும்.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது கவர்ச்சியான பொருள் ஆகிவிட்டது விளையாட்டாகப் பார்ப்பதில்லை. சினிமா நட்சத்திரங்களிடமும், இன்ஸ்டாகிராமில் போட்டோக்களைப் பதிவு செய்யவதற்க்கே நேரம் போதவில்லை பிறகு எங்குப் பயிற்ச்சிக்கு செல்வது.

மிதாளிக்கும் பயிற்ச்சியாளர்க்கும் இடையே நடக்கும் தனிப்பட்ட மனிதர்களின் தாக்குதலாகத் தெரிகிறது. மிதாலி ராஜ், ரமேஷ் பவருக்கும் இடையில் நடப்பது ஈகோ  போர் என்றே தெரிகிறது.

இவர்கள் சுயநலத்துக்காகக் கிரிக்கெட்டை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் அவர்களது வேலையைச் செய்யாமல்? மீடியாக்களுக்குப் பேட்டி தருவது வெட்கக்கேடு. இனியாவது திருந்துவார்களா! அல்லது திருத்தப்பட விடுவார்களா!  கிரிக்கெட் போர்டின் நிலை என்ன?

ஆரம்பக் காலகட்டங்களில் பயிற்சி போன்றவற்றில் ஈடுபாடு காட்டும் வீரர்கள், வீராங்கனைகள் சற்று வசதி வாய்ப்பு ஏற்பட்டவுடன் அதாவது வெளி உலகத்துக்கு வெளிச்சம் கிடைத்தவுடன் எல்லாவற்றிலும் அலட்சியம் காட்டுவதே முக்கியக் காரணமாக உள்ளது.

ஆண்கள் அணி வீரர்களும், பெண்கள் அணி வீரர்களும் விதிவிலக்கல்ல.
மிதாலி ராஜ் போன்றவர்களுக்கு, ஒரு தலைமை பயிற்சியாளர் தனது எல்லா வீரர்களையும் ஒரே மாதிரியான பயிற்சியைச் செய்யச் சொல்லும்போது மூத்த வீரர்களுக்கு எரிச்சல் உண்டாகிறது. எல்லாம் எனக்குத் தெரியும். உன் வேலையைப் பார் நான் எவ்வளவு பெரிய ஸ்டார் சென்று உணர்வதால் தான் பிரச்சனை வெடிக்கிறது.

இது போன்ற சூழ்நிலையில் தான் கும்பலே வெளியேறினார். சற்று வசதி கிடைத்தவுடன் மாடலிங் செய்பவர்கள்போல்ஆகிவிடுகிறார்கள்.
ஒரு தலைமை பயிற்சியாளர்மீது நேரடியாகக் குற்றம்சாட்டும் அளவிற்குச் சென்றுள்ளார்கள் என்றால் இவர் அவருடன் ஒத்துழைப்புக் கொடுத்து உள்ளாரா? என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

ஆஸ்திரேலியா அணியிலிருந்து நீக்கப்பட்ட ஸ்மித், வார்னர் போன்றோர் ஏதாவது ஒரு குற்றச்சாட்டைப் பயிற்சியாளர் அல்லது அணி நிர்வாகம்மீது குறை குறினார்கள் என்றால் இல்லை. அதுதான் ஒழுக்கம்.

ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டும் எந்தக் குற்றசாட்டும் இல்லை. இங்கு இவர்களை  ஒரு மேட்சியில் வெளியில் உட்கார வைத்தாலும் பயிற்ச்சியாளரை குறை சொல்லுவதே வேலை.

இவர்களுக்கு ஷாருக்கான் போன்ற சினிமா ஸ்டார்களைப் பயிற்ச்சியாளராக நியமித்தால் சொன்ன சொல்லைக் கேட்பார்கள் போலும். அது விரைவில் நடைபெறும் என்றே தோன்றுகிறது.

குரு சிஷ்யனுக்கு உள்ள உறவு எங்கே போனது? எதிரிகள்போல் சண்டை போட்டுக் கொள்ள வெட்கமாக இல்லையா? உங்களுக்கு, கிரிக்கெட் போர்டு சற்று வளர்ந்த வீரர்களைக் கண்டுகொள்வது கிடையாது.

பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிவது கிடையாது முற்றிய பிறகே கண்டுகொள்வது. அங்கு உள்ள நிர்வாகிகள் எல்லாரும் கவுரவப் பதவிக்காகக் கிரிக்கெட் போர்டில் சேர்ந்துள்ளனர்.

அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு மட்டுமே கிரிக்கெட்டில் போர்ட்டில் இடம் உண்டு. விளையாட்டு வீரர்களை ஏதோ பேருக்கு உறுப்பினர்களாகச் சேர்ப்பார்கள். அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது.

இவர்களுக்கு அணி வீரர்களைத் தேர்வு செய்யும் இடம் கூடச் சொகுசாக இருந்தால்தான் கூட்டமே நடக்கும் போர்ட்டில் உள்ளவர்களுக்குள்ள அரசியல் அணி வீரர்களிடமும் காணப்படுகிறது.

கடுமையான, ஒழுக்கமான, நேர்மையான தலைமை இல்லாததே இதற்குக் காரணம்.மாடலிங் விளம்பர ஒப்பந்தம்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் மில்லியனர்கள் எவ்வாறு உடம்பு வளையும் உடம்பை பயிற்சியாளர் பயிற்சியில் வலைத்தாள் அவர்களுக்கு எரிச்சல் வராதா என்ன இதுதான் காரணம்

அவர்கள் கிரிக்கெட்டில் உள்ள வருமானத்தைவிட மாடலிங் விளம்பரம்மூலம் சம்பாதிப்பது அதிகமாக உள்ளது. அவர்கள் கிரிக்கெட்டில் இருப்பதே “எங்கள் வீட்டு காரரும் கச்சேரிக்குப் போகிறார்” என்பதற்கே விளையாடுவதற்கு இல்லை.

ஏனென்றால் கிரிக்கெட் ஆடும் அணியில் பெயர் இல்லாவிட்டால் எந்தவித விளம்பரமும், சினிமாவும் தேடி வராது என்பதை உணர்ந்ததால் தான் அவர்களின் கூச்சல் அதிகமாகிவிடுகிறது.இவர்கள் கிரிக்கெட் மீதான காதல் அல்ல என்பதை இவ்வுலகம் நன்கு அறியும்.

கிரிக்கெட் வாரியத்தில் பல விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை மாறாகத் தனக்குப் பிடிக்காதவர்களை இல்லாத விதிமுறைகளை உருவாக்கிக் காலி செய்வதில் கில்லாடிகள் நமது கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள்.

திறமையான, நேர்மையான, கட்டுப்பாடான பயிற்சியாளரைக் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுக்கே பிடிப்பதில்லை.

ஏனென்றால் அவர்களின் கூற்று நமது வாசக படி கூறினாள். “இவன் வேலைக்கு ஆக மாட்டான்” என்று வெளியில் கூறுவார்கள். உண்மையில் “இவன் நமது வேலைக்கு ஆக மாட்டான்” என்று அவர்களே முடிவு செய்துக்கொள்வர்கள்.

மிதாலி ராஜ் அவர்களுக்குச் சினிமா வாய்ப்பு தயாராக உள்ளது விரைவில் ஏற்றுக்கொள்வார் என்று எனக்குத் தோன்றுகிறது. இதற்கு மேலாக அவர் பயிற்சியிலும் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு பிரச்சனைகளுக்கு ஆணிவேர் நட்சத்திர வீரர்கள், வீராங்கணைகள் என்பதே உண்மை. எதற்கும் அடிபணியாதே இதற்குக் காரணம். தயவுசெய்து விலகிவிடுங்கள் இளம் வீரர்களைக் கெடுக்காதீர்கள் புற்றுநோயைக் கண்டறிந்து ஆரம்பத்திலேயே வெட்டிவிடுவது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker