
இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
கோலி தலைமையிலான இந்தியா தனது உலகக் கோப்பை பயணத்தை இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கவுள்ளது. இன்னும் உலகக் கோப்பையில் ஆட்டத்தை துவங்காத அணி என்றால் அது இந்தியாதான். தென்னாப்பிரிக்கா தான் ஆடிய 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷிடம் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்கா இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி இந்த தொடரை வெற்றியுடன் துவங்கும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் முதல் வெற்றிக்கு போட்டி போடுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சவுதாம்ப்டனில் இந்திய ரசிகர்களால் சாலை நெரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆட்ட விவரம்:
இந்தியா – தென்னாப்பிரிக்கா
நாள் : ஜூன் 5, 2019
நேரம்: மாலை 3 மணி (இந்திய நேரப்படி)
இடம்: சவுதாம்ப்டன்
மைதானம்: தி ரோஸ் பவுல்
இந்தியா இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1983ல் இங்கிலாந்திலும், 2011ல் இந்தியாவிலும் வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை.