
இங்கிலாந்து அணி அபார வெற்றி!
தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 189 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 269 ரன், தென் ஆப்ரிக்கா 223 ரன் எடுத்தன. 46 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 391 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்ததுதென் ஆப்ரிக்கா 137.4 ஓவரில் 248 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்து 189 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரபாடா 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 3, ஆண்டர்சன், டென்லி தலா 2, பிராடு, பெஸ், கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 30 புள்ளிகளை தட்டிச் சென்றது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் போர்ட் எலிசபத்தில் ஜன. 16ம் தேதி தொடங்குகிறது.