
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியில் அதிகபட்சமாக மொய்தின் அலி 60 ரன்களும், பேட்ஸ்டோ 52 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோச் 4 விக்கெட்களும், கேப்ரியல் 3 விக்கெட்களும், ஜோசப் 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.
அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 272 ரன்கள் எடுத்து உள்ளது. தற்போது வெஸ்ட் அணி 85 ரன்கள் முன்னிலை பெற்று வலிமையான நிலையில் உள்ளது.
அந்த அணியின் பிரத்வெயிட் 49 ரன்களும், கேம்ப்பில் 47 ரன்களும், சாய் ஹோப் 44 ரன்களும் எடுத்தனர். டேரன் பிராவோ 33 ரன்களுடனும், ஹோல்டர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணியில் பிராட் 3 விக்கெட்களும், மொய்தீன் அலி 2 விக்கெட்களும் கைபற்றி உள்ளனர்.