
கேரளா மற்றும் விதர்பா அணிகள் மோதும் ரஞ்சி கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று துவங்கியது.
இதில் முதல் இன்னிங்ஸில் கேரள அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேரள அணியின் விஷ்ணு வினோத் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.
விதர்பா அணியின் உமேஷ் யாதவ் 7 விக்கெட்களை கைபற்றி அசத்தினார். அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆட துவங்கிய விதர்பா அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் எடுத்து உள்ளது. அந்த அணியின் கேப்டன் ஃபைஸ் பேசேல் 75 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.