
ஜனவரியைத் தமிழ்ப்பண்பாட்டு மாதமாக அறிவித்திருக்கும் அமெரிக்க வடகரோலினா ஆளுநர் ராய் கூப்பர் அவர்களுக்கு என் நன்றி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகத்தைச் சிந்தித்த தமிழை இன்று உலகம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. இது தமிழுக்குப் பெருமை எனப் பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்து உள்ளார்.