உலகம்
அமெரிக்காவின் நெருங்கிய நண்பன்
அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சிவராஜ் அவர்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மாத்தீஸ்சை சந்தித்துப் பேசினார். துறைசார்பான பல்வேறு விஷயங்கள்குறித்து ஆலோசித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்தியா தங்களது நெருங்கிய நட்பு நாடு எனவும், உறவில் நல்ல மாற்றங்களும், நிலைத்தன்மையும் மற்றும் புரிந்துணர்வும் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் இருவரும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.