
வியாட்நாமில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும், வடகொரிய அதிபர் கிம் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. அணு ஆயுதத்தை வடகொரியா முழுமையாக கைவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் கோரிக்கையாக இருந்தது. பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என்பது வடகொரியாவின் கோரிக்கையாக இருந்தது. இதனால் இந்த சந்திப்பு எந்தவித முடிவும் எடுக்கபடாமல் முடிந்தது.