கிரிக்கெட்விளையாட்டு

அடிலெய்டில் அசத்துமா இந்திய அணி?

கிரிக்கெட் விமர்சகர், பொறியாளர் S.வீரசெல்வம்.

தமிழ்நேரலை

1996 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் டெஸ்ட் தொடருக்குப் பார்டர் கவாஸ்கர் டிராபியெனப் பெயரிடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் பின் தொடரை இரு அணிகளும் தலா ஏழு முறை கைப்பற்றிய போதிலும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஒரு முறை கூடத் தொடரைக் கைப்பற்றவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி நாளை அடிலேய்டு மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 12 பேர் ஏற்கனவே 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய அனுபவம் உடையவர்கள்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2_0 எனத் தொடரைக் கைப்பற்றியது.கோலி தலைமையில் ஆசியாவிற்கு உள் இந்திய அணி புலியாகப் பாய்ந்தாலும் வெளிநாடுகளில் வழக்கம்போல் தடுமாறுகிறது.2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலி நான்கு சதங்களுடன் 692(சராசரி 86.5) ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரில் சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய முரளி விஜய் 482 (சராசரி 60.25) ரன்களும், ரஹானே 399 (சராசரி 57)ரன்களும் எடுத்தனர். இவர்களுடன் ரோஹித் ஷர்மா, புஜாராவும் இந்த தொடரில் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர்.

தற்போது பேட்டிங்கில் வலு இழந்து காணப்படும் ஆஸ்திரேலிய அணியில் ஆருன் பின்ச், ஹெட், ஷேன் மார்ஷ், ஹேன்ட்கம்ப் பேட்டிங்கில் தொடர்ச்சியான திறமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. பந்து வீச்சை பொறுத்த வரை ஸ்டார்க், ஹசில் உட், சிம்மன்ஸ், லியோன் எனச் சொந்த மண்ணில் அந்த அணி வலுவாகவே உள்ளது. இந்திய அணி இஷாந்த் சர்மா, சமி, பும்ரா என வேக பந்து வீச்சாளர்களையே மலை அளவு நம்பி உள்ளது.

இவர்கள் கூட்டணி அசத்தும் பட்சத்தில் இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் முறையாக இடம் பெற்று இருக்கும் பிரித்வி ஷா, ரிசப் பாண்ட், ஹனுமா விஹாரி ஆகியோர் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் எனப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

பிரித்வி ஷா காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.2014 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த போட்டியில் கோலி இரண்டு இன்னிங்ஸ்லும் சதம் அடித்ததும், லயன் 12 விக்கெட்கள் கைபற்றியதும் குறிப்பிடதக்கது.

இந்திய அணி விவரம்:

முரளி விஜய், ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவி அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப், ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன், மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்திய அணியின் 70 வருட காத்திருப்புக்கு இந்த முறையாவது பலன் கிடைக்குமா என இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இத்தொடரை எதிர்பார்த்து காத்து உள்ளனர். அவர்களின் கனவை கோலி படை நனவாக்கும்மா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker