கிரிக்கெட்விளையாட்டு

அடித்து நொறுக்கிய நியூசிலாந்து அணி

India need to win 220 runs

இன்று வெலிங்டனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20  போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

முதல் ஓவரில் இருந்தே நியூசிலாந்து வீரர்கள் அடித்து ஆட துவங்கினர்.துவக்க வீரர் கோலின் முன்ரோ 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்து கருநல் பாண்டியா பந்து வீச்சில் விஜய் ஷங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் டிம் செய்ஃபர்ட் 7 பவுண்டரிகள்,6 சிக்ஸர்களுடன் 43 பந்துகளில் 84 ரன்கள் அடித்து கலீல் அஹமத் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 22 பந்துகளில் 34 ரன்கள் அடித்து சாகள் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ரோஸ் டெய்லர் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 219 ரன்கள் அடித்தது.நியூசிலாந்து பேட்ஸ்மென்கள் 20 ஓவர்களில் 14 பவுண்டரிகளும்,14 சிக்ஸர்களும் அடித்து மலைக்க வைத்தனர்.

இந்திய அணி தரப்பில் 4 ஓவர்கள் பந்து வீசிய ஹர்திக் பாண்டியா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். இந்திய பந்து வீச்சில் யாருடைய பந்து வீச்சும் குறிப்பிடதகும் வகையில் இல்லை. இந்திய அணி தற்போது 220 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker